இன்னும் 2 ஆண்டுகள் தோனி விளையாடுவார்: மைக் ஹஸ்ஸி நம்பிக்கை

"அவர் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். பயிற்சிக்கு முன்பே வந்து, அதிகமான பந்துகளை அடிக்கிறார்”.
இன்னும் 2 ஆண்டுகள் தோனி விளையாடுவார்: மைக் ஹஸ்ஸி நம்பிக்கை
ANI

இன்னும் இரு ஆண்டுகள் தோனி விளையாட வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த இரு ஆண்டுகளாகக் காயத்துடன் தோனி விளையாடி வருவதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகவும் நம்பிக்கை தெரிவிக்கும் விதமாக அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பேசியுள்ளார்.

கிரிக்இன்ஃபோவுக்கு அளித்த பேட்டியில் ஹஸ்ஸி பேசியதாவது: தோனி தனது முடிவை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். அவர் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். பயிற்சிக்கு முன்பே வந்து, அதிகமான பந்துகளை எதிர்கொள்கிறார். உடல்நிலையில் மட்டும் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். என்னுடைய தனிப்பட்ட பார்வையில் இன்னும் இரு ஆண்டுகள் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். ஆனால், அது முழுக்க முழுக்க அவரின் முடிவுதான். ரசிகர்கள் அவர் முன்வரிசையில் விளையாட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஆனால், களமிறங்கியவுடன் முதல் பந்திலிருந்தே அடிப்பதை அவரை விட யாரும் சிறப்பாகச் செய்ய முடியாது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in