புயல் அபாயம்: இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம்

புயலின் அபாயம் இருப்பதால் விமான நிலையம் மூடப்பட்டு, விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.
இந்திய அணி
இந்திய அணி ANI

புயலின் அபாயம் காரணமாக இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பார்படாஸில் கடந்த ஜூன் 29 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

இந்நிலையில் இறுதிச் சுற்று முடிந்தவுடன் நேற்று (ஞாயிறு) இந்திய அணி மீண்டும் நாடு திரும்ப திட்டமிட்டிருந்தது. ஆனால், பார்படாஸில் பெரில் புயலின் அபாயம் இருப்பதால் விமான நிலையம் மூடப்பட்டு, விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பார்படாஸில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். புயலில் தாக்கம் குறைந்தவுடன் இந்திய அணி மீண்டும் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி நாடு திரும்பியவுடன் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ள இலங்கை தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பொறுப்பேற்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in