
இந்திய அணியில் தனது மகன் அவமானப்படுத்தப்பட்டதாக அஸ்வினின் தந்தை அதிர்ச்சித் தகவல் அளித்துள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்ட் முடிவடைந்தவுடன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் ஆர். அஸ்வின். ஆஸ்திரேலியாவிலிருந்து இன்று அவர் சென்னைக்குத் திரும்பினார். இந்நிலையில் நியூஸ் 18 ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தனது மகனின் ஓய்வு பற்றி அவருடைய தந்தை ரவிச்சந்திரன் கூறுகையில்,
அஸ்வினின் ஓய்வு பற்றி எனக்குக் கடைசி நிமிடத்தில்தான் தெரிய வந்தது. அஸ்வின் ஓய்வை அறிவித்ததில் பல காரணங்கள் இருக்கலாம். அது அஸ்வினுக்கு மட்டும்தான் தெரியும். ஒருவேளை அவமானப்படுத்தப்பட்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதேசமயம் அஸ்வின் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதால் இதை நாங்கள் எதிர்பார்த்தே இருந்தோம். இதையெல்லாம் எத்தனை நாளைக்குத்தான் அஸ்வினால் பொறுத்துக்கொள்ள முடியும் என்று பேட்டியளித்துள்ளார்.