தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம்!

கடந்த ஜூலையில் தில்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டார்.
தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஹேமங் பதானி நியமனம்!
@DelhiCapitals
1 min read

தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார்.

தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் கடந்த 2018-ல் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஜூலையில் தில்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி நியமிக்கப்பட்டுள்ளார்.

4 டெஸ்டுகள் மற்றும் 40 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்ற ஹேமங் பதானி, ஐபிஎல் 2022-ல் சன்ரைசர்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.

டிஎன்பிஎல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹேமங் பதானியின் தலைமையில், மூன்று முறை டிஎன்பிஎல் கோப்பையை வென்றது சேப்பாக் அணி.

மேலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜாஃப்னா கிங்ஸ், துபாய் கேபிடல்ஸ் போன்ற அணிகளின் பயிற்சியாளராகவும் பதானி செயல்பட்டுள்ளார்.

அதேபோல், தில்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இப்பொறுப்பில் இருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மகளிர் பிரீமியர் லீகில் தில்லி அணியின் இயக்குநராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in