நடவடிக்கை எடுங்கள் டிஎன்சிஏ: ஹேமங் பதானி கோபம்

3 வருடங்களாக நாக் அவுட் சுற்றுக்கு தமிழ்நாடு தகுதி பெறவில்லை. வேதனையாக உள்ளது.
ஹேமங் பதானி
ஹேமங் பதானி
1 min read

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழக அணி இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 4-ல் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியை 3 முறை வென்று சாதனை படைத்த தமிழக அணி, இந்த ஆண்டு ஷாருக் கான் தலைமையில் மிக மோசமாக விளையாடி வருகிறது. முதலிரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற தமிழ்க அணி பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இந்தியாவுக்காக விளையாடிய தமிழக முன்னாள் வீரர் ஹேமங் பதானி, எக்ஸ் தளத்தில் தமிழக அணி குறித்து கூறுகையில், சிக்கிம், திரிபுரா அணிகளிடம் மட்டுமே வெற்றியடைந்த தமிழக அணி - குஜராத், கர்நாடகம், பரோடா, செளராஷ்டிரம் என கோப்பையை வெல்லக்கூடிய அணிகளிடம் தோல்வியடைந்துள்ளது. 3 வருடங்களாக நாக் அவுட் சுற்றுக்கு தமிழ்நாடு தகுதி பெறவில்லை. வேதனையாக உள்ளது. டிஎன்சிஏ சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நேரம் இது என்று தனது கோபத்தையும் ஏமாற்றத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in