மனைவியை விட்டு பிரிந்தாரா ஹார்திக் பாண்டியா?

நடாஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் “நடாஷா ஸ்டான்கோவிக் பாண்டியா” என்ற பெயரிலிருந்து “பாண்டியா” என்பதை மட்டும் நீக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியா@hardikpandya7

ஹார்திக் பாண்டியா தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கிடம் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

செர்பிய நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்கை பாண்டியா கடந்த 2020-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் இருக்கிறார்.

இந்நிலையில் பாண்டியா தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கிடம் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடாஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் “நடாஷா ஸ்டான்கோவிக் பாண்டியா” என்ற பெயரிலிருந்து “பாண்டியா” என்பதை மட்டும் நீக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஒருவருக்கொருவர் தாங்கள் பதிவிடும் புகைப்படங்களுக்கு ‘லைக்’ செய்து கொள்வதில்லை என்றும், நடாஷா பாண்டியாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை நீக்கி விட்டதாகவும் தெரிகிறது.

அதேபோல கடந்த மார்ச் 4 அன்று நடாஷாவின் பிறந்தநாளுக்கு பாண்டியா வாழ்த்து சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இவ்விருவரும் பிரிந்து விட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in