பாராலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தையில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
2024 பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் வில்வித்தை ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் - போலாந்தின் லூகாஸும் மோதினர்.
இதில் ஹர்விந்தர் சிங் 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மேலும், பாராலிம்பிக்ஸ் வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 4-வது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
எனவே, 4 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது இந்தியா.