சன்ரைசர்ஸ் அணி அனைத்து ஆட்டங்களிலும் வாய்ப்பளிக்காத பட்சத்தில், வாஷிங்டன் சுந்தர் மற்றொரு அணியைத் தேர்வுச் செய்ய வேண்டும் என்று ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.
பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தனது யுடியூப் சேனலில் கிரிக்கெட் தொடர்பான காணொளிகளைப் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - இலங்கை தொடர் குறித்து அவர் பேசுகையில், “வாஷிங்டன் சுந்தர் சன்ரைசர்ஸிலிருந்து மாற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
“ஜடேஜாவின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் நிரப்புவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்குச் சிறந்த பங்களிப்பை அளிப்பார் என்று நம்புகிறேன்.
ஆனால், அவர் தனது ஐபிஎல் அணியை மாற்ற வேண்டும். சன்ரைசர்ஸ் அணி அனைத்து ஆட்டங்களிலும் வாய்ப்பளிக்காத பட்சத்தில், அவர் மற்றொரு அணியைத் தேர்வுச் செய்ய வேண்டும்.
சன்ரைசர்ஸுக்கு விளையாடாமல், இந்திய அணியில் மட்டும் விளையாட வேண்டும் என்கிற இக்கட்டான சூழ்நிலைக்கு அவர் தள்ளப்படக்கூடாது” என்றார்.