இவர்தான் பாண்டியாவின் புதுக் காதலியா?
ANI

இவர்தான் பாண்டியாவின் புதுக் காதலியா?

தற்போது கிரீஸில் விடுமுறையைக் கழித்து வரும் பாண்டியா, அங்கு எடுத்த புகைப்படங்களை...
Published on

தனது மனைவி நடாஷாவைச் சமீபத்தில் விவாகரத்து செய்தார் பிரபல கிரிக்கெட் வீரர் பாண்டியா. இருவருக்கும் ஒரு மகன் உண்டு. இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பாடகி ஜாஸ்மின் வாலியாவை பாண்டியா புதிதாகக் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தில் பிறந்த ஜாஸ்மின், ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி மொழிகளில் பாடல்களை வெளியிட்டுள்ளார். 2017-ல் வெளியான பாம் டிக்கி (Bom Diggy) என்கிற இவருடைய பாடல் அதிகக் கவனத்தைப் பெற்றது.

தற்போது கிரீஸில் விடுமுறையைக் கழித்து வரும் பாண்டியா, அங்கு எடுத்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதேபோல ஜாஸ்மின் வாலியாவும் கிரீஸில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த ரசிகர்களும் மும்பை ஊடகங்களும் இருவருடைய காதலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in