ஐசிசி டி20 தரவரிசை: நெ.1 ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்டியா

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 12 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தில் உள்ளார்.
ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியாANI
1 min read

டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார் ஹார்திக் பாண்டியா.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஒரு அரைசதம் உட்பட 144 ரன்கள் அடித்து, 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா.

இறுதிச் சுற்றில் முக்கியமான தருணத்தில் கிளாசன் மற்றும் டேவிட் மில்லரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதன் மூலம் டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார்.

மேலும், இந்தச் சாதனையைச் செய்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் பெற்றார். இலங்கை வீரர் ஹசரங்காவும் அதே புள்ளிகளுடன் இருப்பதால், இருவரும் சேர்ந்து முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்கள்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா 12 இடங்கள் முன்னேறி 12-வது இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 4 இடங்கள் முன்னேறி 13-வது இடத்திலும் உள்ளனர். அக்‌ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முறையே 7 மற்றும் 9-வது இடத்தில் உள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in