
தங்களின் 4 வருட திருமண உறவு முடிந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா அறிவித்துள்ளார்.
செர்பிய நடிகையான நடாசா ஸ்டான்கோவிக்கை பாண்டியா கடந்த 2020-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் இருக்கிறார்.
இந்நிலையில் பாண்டியா தனது மனைவி நடாசா ஸ்டான்கோவிக்கிடம் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “4 வருட திருமண உறவுக்கு பிறகு நாங்கள் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இது தான் நல்லது என நம்புகிறோம். இது மிகவும் கடினமான முடிவு.
எங்களின் மகன் அகஸ்தியா இருவரது வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அவருடைய மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் வழங்குவோம். இந்த கஷ்டமான சூழலில் உங்களின் ஆதரவை முக்கியமாகக் கருதுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.