சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் குஜராத் வீரர் உர்வில் படேல் 28 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் திரிபுரா அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு விளையாடிய குஜராத் அணி 10.2 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் குஜராத் வீரர் உர்வில் படேல் 35 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்தார். தனது சதத்தை நிறைவுசெய்ய 28 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்ட உர்வில் படேல் சர்வதேச அளவில் குறைந்தப் பந்துகளில் சதமடித்த 2-வது வீரர் மற்றும் குறைந்தப் பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார்.
சர்வதேச அளவில் எஸ்டோனியாவைச் சேர்ந்த சாஹில் சௌஹான் 27 பந்துகளிலும், இந்திய அளவில் ரிஷப் பந்த் 32 பந்துகளிலும் சதமடித்து அதிவேக சதமடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் உர்வில் படேலை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை என்பது வருத்தமாகவே உள்ளது.