சச்சினின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

அவருக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சச்சின்
சச்சின்ANI
1 min read

சச்சினின் பாதுகாவலராக பணியாற்றி வந்த மாநில ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவர் இன்று தற்கொலை செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். இவரின் பாதுகாவலராக மாநில ரிசர்வ் காவல் படை வீரர் ஜவான் பிரகாஷ் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் ஜவான் பிரகாஷ் சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான மஹாராஷ்டிர மாநிலம் ஜாம்நர் நகருக்குச் சென்றதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே கழுத்துப் பகுதியில் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இவருக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

உயிரிழந்த ஜவான் பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஜாம்நர் காவல் துறையினர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிகிறது.

logo
Kizhakku News
kizhakkunews.in