சிஎஸ்கே முதல் பேட்டிங்: தீக்‌ஷனாவுக்குப் பதில் பதிரனா!

டாஸ் வென்ற ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
சிஎஸ்கே முதல் பேட்டிங்: தீக்‌ஷனாவுக்குப் பதில் பதிரனா!
ANI

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் 7-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற குஜராத், இந்த ஆட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் களமிறங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸில் மஹீஷ் தீக்‌ஷனாவுக்குப் பதில் மதிஷா பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சென்னை அணி இரண்டாவது பேட்டிங் செய்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜின்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிஸூர் ரஹ்மான்.

குஜராத் டைடன்ஸ்:

ரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில் (கேப்டன்), அஸ்மதுல்லா ஓமர்ஸாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், சாய் கிஷோர், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா, ஸ்பென்செர் ஜான்சன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in