மில்லர் மிரட்டல்: குஜராத் அணிக்கு 2-வது வெற்றி

அதிரடியாக விளையாடிய மில்லர் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.
குஜராத் அணிக்கு 2-வது வெற்றி
குஜராத் அணிக்கு 2-வது வெற்றிANI
1 min read

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் அணி.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் அணிகள் அஹமதாபாதில் விளையாடின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் அணி அதிரடியாக தொடங்கினாலும் பெரியளவில் கூட்டணி அமையவில்லை. மயங்க் அகர்வால் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்ததாக ஹெட் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா, மார்க்ரம், கிளாஸென், ஷாபாஸ் அஹமது என அனைவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தாலும், ஒருவரும் 30 ரன்களை தாண்டவில்லை. அபிஷேக் சர்மா 29, மார்க்ரம் 17, கிளாஸென் 24, ஷாபாஸ் அஹமது 22 ரன்களில் வெளியேறினர். மோஹித் சர்மா அருமையாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பிறகு இறுதியில் அப்துல் சமத் 14 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய குஜராத் அணிக்கு சாஹா அதிரடியான தொடக்கத்தை அமைத்து தந்தார். சாஹா 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஷாபாஸ் அஹமது பந்துவீச்சில் வெளியேறினார். இதன் பிறகு கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். கில் அதிரடியாக விளையாட, சுதர்சன் நிதானமாக விளையாடினார். கில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு மில்லரின் மிரட்டலான ஆட்டத்தால் குஜராத் அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி தனது 2-வது வெற்றியை பெற்றது.

அதிரடியாக விளையாடிய மில்லர் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் 14 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. மோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வானார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in