கிராண்ட் செஸ் டூர் தொடர்: நெ.1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

கார்ல்சன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரக்ஞானந்தா 3-வது இடத்தில் உள்ளார்.
நெ.1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
நெ.1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாANI

போலந்தில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில் தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் நெ.1 செஸ் வீரரான கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

போலந்து நாட்டில் 9-வது கிராண்ட் செஸ் டூர் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு போட்டி என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறும்.

இப்போட்டியின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் வீரர் கோப்பையை வெல்வார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரக்ஞானந்தா உலகின் நெ.1 செஸ் வீரரான கார்ல்சனை வீழ்த்தினார். இதன் மூலம் கார்ல்சன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரக்ஞானந்தா 3-வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in