பாகிஸ்தான் வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் தேர்வு

2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் செயல்பட்டார்.
கேரி கிரிஸ்டன்
கேரி கிரிஸ்டன் @Gary_Kirsten

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்குப் புதிய பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு கேரி கிரிஸ்டன் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட கேரி கிரிஸ்டன் 2011 முதல் 2013 வரை தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். இதன் பிறகு ஐபிஎல்-ல் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராகவும், 2022-ல் ஐபிஎல் போட்டியை வென்ற குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராகவும் செயல்பட்டார். இதைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் ஒருநாள், டி20 அணிகளுக்கு பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உதவிப் பயிற்சியாளராக அஸார் முஹமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மூவரும் இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மே 22 அன்று தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முதல் கேரி கிரிஸ்டன் தனது பணியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in