அரசியல் கடமையிலிருந்து விடுவியுங்கள்: பாஜக தலைமையிடம் கம்பீர் வேண்டுகோள்

இந்த வருட ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் கடமையிலிருந்து விடுவியுங்கள்: பாஜக தலைமையிடம் கம்பீர் வேண்டுகோள்
ANI
1 min read

அரசியல் கடமையிலிருந்து விடுவியுங்கள் என்று பாஜக தலைமையிடம் கௌதம் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய முன்னாள் வீரரும் எம்.பி.யுமான கெளதம் கம்பீர் ஐபிஎல் போட்டியில் கடந்த இரு வருடங்களாக லக்னெள அணியின் ஆலோசகராகப் பணியாற்றினார். கிழக்கு தில்லியின் பாஜக எம்.பி.யான கம்பீர், இந்த வருட ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். கம்பீர் தலைமையில் கேகேஆர் அணி 2012, 2014 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது.

இந்நிலையில் ஐபிஎல் பொறுப்பு காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடியாத சூழலும் அவருக்கு உள்ளதால் அரசியல் கடமையிலிருந்து தன்னை விடுவியுங்கள் என்று பாஜக தலைமையிடம் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் வரும் தேர்தலில் கம்பீர் போட்டியிட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in