

இந்திய அணி சொந்த மண்ணில் அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்த காரணத்தால் கௌதம் கம்பீரின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் முழுமையாக இழந்துள்ளது இந்தியா. சொந்த மண்ணில் கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கடந்தாண்டு முழுமையாக இழந்தது. இதைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தற்போது டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்துள்ளது இந்தியா.
இரு பெரிய தோல்விகளைத் தொடர்ந்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன. கடந்த 60 ஆண்டுகளில் சொந்த மண்ணில் 7 டெஸ்டுகளில் 5-ல் தோல்வியடைவது இதுவே முதன்முறை.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் கடந்த ஜூலை 2024-ல் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்றதிலிருந்து 6 டெஸ்ட் தொடர்களில் இந்தியா விளையாடியுள்ளது. மொத்தம் 19 டெஸ்டுகளில் விளையாடியிருக்கிறது. இதில் இந்திய அணி வெற்றியைவிட தோல்வியைச் சந்தித்ததே அதிகம்.
கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் இந்தியா
டெஸ்ட் - 19
வெற்றி - 7
தோல்வி - 10
டிரா - 2
வெற்றி விகிதம் - 36.82%
டெஸ்ட் தொடர் - 6
வெற்றி
வங்கதேச தொடர் 2-0 (2)
மேற்கிந்தியத் தீவுகள் தொடர் 2-0 (2)
தோல்வி
நியூசிலாந்து தொடர் 0-3 (3)
ஆஸ்திரேலியா (பிஜிடி தொடர்) 1-3 (5)
தென்னாப்பிரிக்கா 0-2 (2)
டிரா
இங்கிலாந்து தொடர் 2-2 (5)
கம்பீருக்கு முன்பு கடந்த காலங்களில் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக இருந்தவர்களுடன் ஒப்பிடுகையில் கம்பீரின் தரவுகள் மோசமாக உள்ளன.
IND v SA | India v South Africa | Simon Harmer | Marco Jansen | Guwahati Test | Ravindra Jadeja | Rishabh Pant | Gautam Gambhir | Temba Bavuma |