நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் ராஜினாமா

டெஸ்ட் அணிக்கானப் பயிற்சியாளர் பொறுப்புக்கு மீண்டும் விண்ணப்பிப்பது தொடர்பாக...
நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் ராஜினாமா
ANI
1 min read

நியூசிலாந்து வெள்ளைப் பந்து பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி ஸ்டெஸ் விலகியுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டெட் கடந்த 2018-ல் பொறுப்பேற்றார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துக்கும் இவரே பயிற்சியாளராக இருந்து வந்தார்.

இவருடைய வழிகாட்டுதலில் 2019 உலகக் கோப்பை இறுதிச் சுற்று, 2021 டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்று மற்றும் 2024 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது.

2021-ல் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது. இந்தியாவுக்கு எதிராக கடந்தாண்டு 3-0 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. இந்தக் காலகட்டத்தில் கேரி ஸ்டெட் இடைவேளை எடுக்கும்போது, லுக் ராங்கி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார்.

கேரி ஸ்டெட் ஒப்பந்தம் ஜுன் மாதம் காலாவதி ஆகிறது. இதனிடையே, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் மற்றும் டெஸ்டுக்கு தனி பயிற்சியாளர் என்கிற கோணத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருகிறது.

தென்னாப்பிரிக்க வெள்ளைப் பந்து பயிற்சியாளராக இருந்த ராப் வால்டர், அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் நியூசிலாந்து அணியுடன் இணைக்கப்பட்டார்.

இந்நிலையில், நியூசிலாந்தின் வெள்ளைப் பந்து பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கேரி ஸ்டெட் விலகியுள்ளார். டெஸ்ட் அணிக்கானப் பயிற்சியாளர் பொறுப்புக்கு மீண்டும் விண்ணப்பிப்பது தொடர்பாக கேரி ஸ்டெட் வரும் நாள்களில் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.

"அடுத்த மாதம் மனைவி, குடும்பத்தினர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்வேன். இதன்பிறகு, டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பேன்" என்றார் ஸ்டெட்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in