அணியின் வெற்றிக்கே முன்னுரிமை: கம்பீர்

“பயிற்சியாளர் பதவி குறித்து தற்போது என்னால் எதுவும் பேச முடியாது”.
கம்பீர்
கம்பீர்ANI
1 min read

தனிப்பட்ட ஒருவரின் சாதனையை குறித்து யோசித்தால், அந்த அணி மிகவும் பாதிக்கப்படும் என கம்பீர் பேசியுள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் ஜூன் இறுதியில் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைகிறது. இவருக்கு அடுத்தபடியாக ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2027 வரையிலான புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மே 27 வரை பெறப்பட்டன.

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக, தான் நியமிக்கப்பட்டால் அது தனக்குக் கிடைத்த பெருமை என்றும் தனக்கு அதில் விருப்பம் இருப்பதாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணிக்கான நேர்காணலில் கௌதம் கம்பீர் பங்கேற்றார். இதன் பிறகு சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கம்பீர், “ஒருவரின் தனிப்பட்ட சாதனையைவிட அணியின் வெற்றியே மிகவும் முக்கியம்” என பேசியுள்ளார்.

கம்பீர் பேசியதாவது:

“பயிற்சியாளர் பதவி குறித்து தற்போது என்னால் பேச முடியாது. மிகவும் கடினமான கேள்விகளை கேட்கிறீர்கள். தற்போதைய சூழலில் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். தனிப்பட்ட ஒருவரின் சாதனையை குறித்து யோசிக்காமல் அணியின் வெற்றியே மிகவும் முக்கியம் என நினைத்தால் அனைத்தும் எதிர்பார்த்தபடி நடக்கும். இப்போது இல்லையென்றாலும், ஒரு நாள் நிச்சயமாக நடக்கும். ஆனால், ஒருசிலர் சிறப்பாக செயல்பட மற்றொருவர் உதவ வேண்டும் என்ற சூழல் இருக்கும் பட்சத்தில், அந்த அணி மிகவும் பாதிக்கப்படும். என்னை பொறுத்தவரை அணியின் வெற்றியே மிகவும் முக்கியம். அதற்கே நான் முன்னுரிமை அளிப்பேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in