உலகளவில் புகழ்பெற்ற போர்ச்சுகல் கால்பந்து வீரரான ரொனால்டோ புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார்.
39 வயதான ரொனால்டோ “யுஆர் கிறிஸ்டியானோ” என்கிற புதிய யூடியூப் சேனலை நேற்று (ஆகஸ்ட் 21) தொடங்கினார்.
இது தொடர்பான காணொளியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “நான் புதிய யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளேன். அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்” என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து சேனல் ஆரம்பித்த ஒரே நாளில் 1.5 கோடி ஆதரவாளர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார் ரொனால்டோ.
முன்னதாக, வேகமாக 10 லட்சம் ஆதரவாளர்களை பெற்றவர் என்ற சாதனையையும் படைத்த ரொனால்டோ, 10 லட்சம் ஆதரவாளர்களை பெற்றதற்காக கொடுக்கப்படும் கோல்டன் பட்டனையும் சேனல் ஆரம்பித்த முதல் நாளிலேயே பெற்றார்.
ரொனால்டோ தற்போது சவுதி அரேபியா லீகில் அல் நசர் என்ற அணிக்காக விளையாடி வருகிறார்.