புதிய கேப்டனுக்கு ஜடேஜாவும் ஆதரவு: ஸ்டீபன் ஃபிளெமிங்

2022-ல் ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம்.
ஸ்டீஃபன் ஃபிளெமிங்
ஸ்டீஃபன் ஃபிளெமிங்ANI

சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் பேசியதாவது:

“சிஎஸ்கே அணியின் எதிர்காலம் கருதி தோனி இந்த முடிவை எடுத்துள்ளார். புதிய கேப்டனை அறிவிக்க இதுவே சரியான நேரம் என்பதால் கெயிக்வாடுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. 2022-ல் ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டோம். ருதுராஜை கேப்டனாக தேர்வு செய்ததற்கு ஜடேஜா முழு ஆதரவைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு சிலர் காயத்தால் பாதிக்கப்பட்டனர். இம்முறை அதுபோன்று நடக்காமல் இருக்க விரும்புகிறோம். தோனியும் கடந்த ஆண்டு முழங்கால் வலியால் அவதிப்பட்டார். ஆனால் தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளார். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதாலும், அணியின் எதிர்காலம் கருதியும் இம்முடிவை தோனி எடுத்துள்ளார்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in