மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்: குவாலிஃபையர் 1 வாய்ப்பை இழந்த ராஜஸ்தான்!

குவாலிஃபையர் 1-ல் கேகேஆர் - சன்ரைசர்ஸ், எலிமினேட்டரில் ராஜஸ்தான் - ஆர்சிபி மோதுகின்றன.
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்: குவாலிஃபையர் 1 வாய்ப்பை இழந்த ராஜஸ்தான்!
ANI

ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான நடப்பு ஐபிஎல் பருவத்தின் கடைசி லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.

 • குவாஹாத்தியில் இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30-க்கு ஆட்டம் தொடங்கவிருந்தது.

 • மழையால் டாஸ் போடுவது தாமதமானது.

 • மழை நின்றவுடன், இரவு 10.25 மணியளவில் மைதானதம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

 • ஆய்வின் அடிப்படையில், இரு அணிகளுக்கும் தலா ஏழு ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இரவு 10.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

 • இரவு 10.45 மணிக்கு ஆட்டம் தொடங்கவிருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது.

 • குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் ஆட்டமாக விளையாடுவதற்கு, ஆட்டம் இரவு 10.56-க்கு தொடங்கியிருக்க வேண்டும்.

 • எனினும், மழை குறுக்கீட்டால் இரவு 10.56-க்கு ஆட்டம் தொடங்கவில்லை. இதனால், ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தார்கள்.

 • இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளன.

 • கேகேஆர் 20 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

 • ராஜஸ்தான் ராயல்ஸ் 17 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸை சமன் செய்துள்ளது. எனினும், நெட் ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் 2-வது இடத்திலும், ராஜஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளன.

 • இதன்மூலம், குவாலிஃபையர் 1-ல் விளையாடும் வாய்ப்பை ராஜஸ்தான் இழந்துள்ளது.

குவாலிஃபையர் 1:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் v சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

நாள்: மே 21

இடம்: அஹமதாபாத்

எலிமினேட்டர்:

ராஜஸ்தான் ராயல்ஸ் v ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

நாள்: மே 22

இடம்: அஹமதாபாத்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in