ஐபிஎல் 2026 ஏலம்: கேள்வி, பதில்கள்! | IPL Auction |

அதிகபட்சமாக கேகேஆர் வசம் ரூ. 64.3 கோடியும் சிஎஸ்கே வசம் ரூ. 43.4 கோடியும் மீதமுள்ளன.
FAQ's on IPL Auction 2026
அபுதாபியில் டிசம்பர் 16 அன்று ஏலம் நடைபெறுகிறது (கோப்புப்படம்)AP Photo
2 min read

ஐபிஎல் 2026 போட்டிக்கான ஏலம் துபாயில் நாளை (டிசம்பர் 16) நடைபெறவுள்ள நிலையில், ரசிகர்களிடம் அது சார்ந்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

ஏலம் எப்போது நடக்கிறது? எங்கு நடக்கிறது?

ஐபிஎல் 2026 ஏலம் துபாயில் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. ஒரே நாளில் ஏலம் நடைபெறவுள்ளது.

ஏலத்துக்குப் பதிவு செய்துள்ள வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

மொத்தம் 1,355 வீரர்கள் பதிவு செய்திருந்தார்கள். இதிலிருந்து 359 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கெடுக்கவுள்ளார்கள். இவர்களில் மொத்தம் 244 பேர் இந்திய வீரர்கள், 115 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

359 வீரர்களில் 40 வீரர்கள் தங்களுடைய குறைந்தபட்ச தொகையை ரூ. 2 கோடியாக நிர்ணயித்துள்ளார்கள். இவர்களில் ரவி பிஷ்னாய் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவர் மட்டுமே இந்திய வீரர்கள்.

எத்தனை வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது?

ஏலத்தில் ஐபிஎல் அணிகளால் மொத்தம் 77 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. 77 வீரர்களில் 31 வீரர்கள் வெளிநாட்டு வீரர்களாக இருக்க வேண்டும்.

எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு தொகை மீதம் உள்ளது?

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • மீதமுள்ள தொகை: ரூ. 43.4 கோடி

  • தேர்வு செய்ய வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை: 9 (வெளிநாட்டு வீரர்கள் - 4)

தில்லி கேபிடல்ஸ்

  • மீதமுள்ள தொகை: ரூ. 21.8 கோடி

  • தேர்வு செய்ய வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை: 8 (வெளிநாட்டு வீரர்கள் - 5)

குஜராத் டைடன்ஸ்

  • மீதமுள்ள தொகை: ரூ. 12.9 கோடி

  • தேர்வு செய்ய வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை: 5 (வெளிநாட்டு வீரர்கள் - 4)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • மீதமுள்ள தொகை: ரூ. 64.3 கோடி

  • தேர்வு செய்ய வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை: 13 (வெளிநாட்டு வீரர்கள் - 6)

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ்

  • மீதமுள்ள தொகை: ரூ. 22.95 கோடி

  • தேர்வு செய்ய வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை: 6 (வெளிநாட்டு வீரர்கள் - 4)

மும்பை இந்தியன்ஸ்

  • மீதமுள்ள தொகை: ரூ. 2.75 கோடி

  • தேர்வு செய்ய வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை: 5 (வெளிநாட்டு வீரர்கள் - 1)

பஞ்சாப் கிங்ஸ்

  • மீதமுள்ள தொகை: ரூ. 11.5 கோடி

  • தேர்வு செய்ய வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை: 4 (வெளிநாட்டு வீரர்கள் - 2)

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • மீதமுள்ள தொகை: ரூ. 16.05 கோடி

  • தேர்வு செய்ய வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை: 9 (வெளிநாட்டு வீரர்கள் - 1)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

  • மீதமுள்ள தொகை: ரூ. 16.4 கோடி

  • தேர்வு செய்ய வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை: 8 (வெளிநாட்டு வீரர்கள் - 2)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • மீதமுள்ள தொகை: ரூ. 25.5 கோடி

  • தேர்வு செய்ய வேண்டிய வீரர்கள் எண்ணிக்கை: 10 (வெளிநாட்டு வீரர்கள் - 2)

IPL 2026 | IPL Mini Auction | IPL Auction 2026 | Abu Dhabi | IPL |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in