கர்நாடகத்தில் நடைபெற்று வரும் மகாராஜா கோப்பையில் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டார்.
இவரது மகனான சமித் டிராவிட் தற்போது டி20 லீகில் விளையாடி வருகிறார்.
மகாராஜா கோப்பைக்கான ஏலத்தில் மைசூர் வாரியர்ஸ் அணியால் 50,000 ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்டார் சமித் டிராவிட்.
ஆல்ரவுண்டரான இவர் நேற்று (ஆகஸ்ட் 15) நடைபெற்ற ஆட்டம் மூலம் இப்போட்டியில் அறிமுகமானார். 18 வயதான இவர் இந்த ஆட்டத்தில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கர்நாடக யு-19 அணிக்காக விளையாடிய சமித் டிராவிட் மாநிலங்களால் நடத்தப்படும் டி20 லீகில் முதல்முறையாக விளையாடினார்.
ராகுல் டிராவிட்டின் மகன் என்பதால் இவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் இவர் களமிறங்கியதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.