பயிற்சியாளர் பதவிக்கு மோடி, தோனி பெயர்களில் போலி விண்ணப்பங்கள்!

உண்மையாகவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார்களா? என்பதைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.
பயிற்சியாளர் பதவிக்கு மோடி, தோனி பெயர்களில் போலி விண்ணப்பங்கள்!
பயிற்சியாளர் பதவிக்கு மோடி, தோனி பெயர்களில் போலி விண்ணப்பங்கள்!

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி, தோனி, அமித் ஷா பெயர்களில் போலியாக 3000 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை ஜூன் 2 முதல் 29 வரை நடைபெறுகிறது. ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் இந்த உலகக் கோப்பையுடன் நிறைவடைவதால், புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்கானப் பணியை பிசிசிஐ தொடங்கியது.

ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2027 வரை தலைமைப் பயிற்சியாளராக இருப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ கோரி வந்தது. இதற்கான கடைசி தேதி மே 27 என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு தோனி, சச்சின் டெண்டுல்கர், பிரதமர் மோடி, அமித்ஷா என்ற பெயர்களில் போலியாக 3000 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பிசிசிஐ மே 13 அன்று கூகுள் ஃபார்ம் மூலம் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களைப் பெறுவதாக அறிவித்திருந்தது. இதில் போலி விண்ணப்பங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களான தோனி, சேவாக், ஹர்பஜன் சிங், டெண்டுல்கர் போன்ற பெயர்களுடன் அரசியல் தலைவர்களான பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரின் பெயர்களிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதனால் உண்மையாகவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார்களா? என்பதைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in