யூரோ கோப்பை: முதல் ஆட்டத்தில் ஜெர்மனி அபார வெற்றி

ஆரம்பம் முதலே ஜெர்மனி அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து கோல்களை அடித்தது.
முதல் ஆட்டத்தில் ஜெர்மனி அபார வெற்றி
முதல் ஆட்டத்தில் ஜெர்மனி அபார வெற்றி@EURO2024
1 min read

யூரோ கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் 5 - 1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி.

24 அணிகள் பங்கேற்கும் யூரோ கால்பந்து போட்டி ஜூன் 14-ல் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஜெர்மனி - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஜெர்மனி அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து கோல்களை அடித்தது.

ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த ஜெர்மனி அணி, அதன் பிறகு 19-வது நிமிடத்திலும், 45-வது நிமிடத்திலும் கோல்களை அடித்து முதல் பாதியில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

முதல் பாதியில் ஸ்காட்லாந்து வீரர் போர்டியஸுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்ட நிலையில், 10 வீரர்களுடன் மட்டுமே அந்த அணி விளையாடியது.

இதைத் தொடர்ந்து மீண்டும் 2-வது பாதியில் ஆதிக்கம் செலுத்தியது ஜெர்மனி. 68-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து 4-0 என்ற கணக்கில் ஜெர்மனி அணி முன்னிலையில் இருந்தது. 87-வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து வீரர் கோல் அடிக்க முயற்சி செய்தபோது அது ஜெர்மனி வீரரின் உடலில் பட்டு எதிர்பாராத வகையில் கோலாக மாறியது.

இதன் பிறகு 4-1 என்ற கணக்கில் ஆட்டம் சென்று கொண்டிருந்தபோது 93-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை அடித்து 5-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஜெர்மனி. இதன் மூலம் இப்போட்டியின் முதல் வெற்றியை பதிவு செய்ததுள்ளது ஜெர்மனி அணி.

இன்றைய ஆட்டங்கள்

ஹங்கேரி - ஸ்விட்சர்லாந்து

ஸ்பெயின் - குரோஷியா

இத்தாலி - அல்பேனியா

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in