தொழிலாளர் சட்ட விதிமுறையால் 16 வயது ஸ்பெயின் வீரர் எதிர்கொண்ட நெருக்கடி!

ஜெர்மனியில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்யக்கூடாது என்கிற தொழிலாளர் சட்ட விதிமுறை அமலில் உள்ளது.
தொழிலாளர் சட்ட விதிமுறையால் 16 வயது ஸ்பெயின் வீரர் எதிர்கொண்ட நெருக்கடி!
தொழிலாளர் சட்ட விதிமுறையால் 16 வயது ஸ்பெயின் வீரர் எதிர்கொண்ட நெருக்கடி!@EURO2024
1 min read

ஸ்பெயின் கால்பந்து அணியைச் சேர்ந்த 16 வயதான யமால் ஒவ்வொரு ஆட்டத்திலும் பாதியில் அனுப்பப்படுவதற்கு பிண்ணனியில் உள்ள வித்தியாசமான காரணத்தை அறியலாம்.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 17-வது யூரோ கால்பந்து போட்டி ஜெர்மனியில் ஜூன் 14 அன்று தொடங்கியது.

அரையிறுதி சுற்றில் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகளும், நெதர்லாந்து - இங்கிலாந்து அணிகளும் மோதின.

ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய அணிகள் 2-1 என்ற கணக்கில் எதிரணிகளை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

ஜூலை 14 அன்று நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இதில் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 9-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இதன் பிறகு ஸ்பெயின் அணி தனது 21-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை 16 வயதான யமால் அடித்தார். இதன் மூலம் இளம் வயதில் யூரோ அரையிறுதி போட்டியில் கோல் அடித்த வீரர் எனும் சாதனையை படைத்தார் யமால்.

இதன் பிறகு மீண்டும் ஸ்பெயின் அணி 25-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை அடிக்கவும், யமால் உதவினார்.

இந்நிலையில் யமால் குறித்த ஒரு சுவாரசியமான விஷயத்தை பார்க்கலாம்.

* ஒவ்வொரு ஆட்டத்திலும் யமால் ஆட்டத்தின் பாதியில் மாற்று வீரராக வெளியே அனுப்பப்பட்டார். கால்பந்தை பொறுத்தவரை இது சகஜம் தான். ஆனால், யமால் ஆட்டம் தொடங்கும் நேரத்தைப் பொறுத்தே மாற்று வீரராக அனுப்பப்படுகிறார். அதற்கான காரணம் அவரது வயது தான்.

* யூரோ போட்டி நடைபெறும் நாடான ஜெர்மனியில் 18 வயதுக்குட்பட்டவர்கள் இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்யக்கூடாது என்கிற தொழிலாளர் சட்ட விதிமுறை அமலில் உள்ளது. ஆனால், விளையாட்டு வீரர்கள் மட்டும் இரவு 11 மணி வரை விளையாட அனுமதிக்கப்படுகின்றனர்.

* யமாலுக்கு 16 வயதே ஆன நிலையில் அவரால் இரவு 11 மணிக்கு மேல் விளையாட முடியாது.

* யூரோ ஆட்டங்கள் ஜெர்மனி நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறுவதால், யமால் அனைத்து ஆட்டங்களிலும் முழு ஆட்டத்தை விளையாடாமல் (86, 71, 19-வது நிமிடத்தில்) மாற்று வீரராக வெளியேறினார்.

* ஜெர்மனி நேரப்படி இரவு 11 மணிக்கு மேல் அவரை விளையாட வைத்தால் அந்த அணியின் பயிற்சியாளருக்கு 30,000 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இதனால் தான் யமால் ஒவ்வொரு ஆட்டத்திலும் பாதியில் அனுப்பப்படுகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in