டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தில் மீண்டும் ஆர்ச்சர்!

2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது.
டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி
டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணிANI

டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் 29 வரை மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி மீண்டும் பட்லர் தலைமையில் இந்த உலகக் கோப்பையில் களமிறங்குகிறது.

கடந்த ஒரு ஆண்டாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல்-ல் சிறப்பாக விளையாடிவரும் வில் ஜேக்ஸ், சால்ட், பேர்ஸ்டோ ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் டாப்லி, அடில் ரஷித், மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அனுபவமிக்க வலுவான 15 பேருடன் களமிறங்கும் இங்கிலாந்து அணிக்கு மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி: பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஆர்ச்சர், பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரண், டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜேக்ஸ், ஜோர்டன், லிவிங்ஸ்டன், டாப்லி, அடில் ரஷித், மார்க் வுட், சால்ட்.

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 4 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கும் இதே அணியே தேர்வு செய்யப்பட்டுள்ளது. மே 22 அன்று இத்தொடர் தொடங்கவுள்ளதால், ஐபிஎல்-ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் பிளேஆஃப் சுற்றில் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in