3-0: டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

கடைசி டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!
டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!@englandcricket
1 min read

மே.இ. தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து அணி.

மே.இ. தீவுகளுக்கு எதிரான மூன்று டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்டுகளையும் இங்கிலாந்து அணி வென்றது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கடந்த ஜூலை 26 அன்று தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிராத்வெயிட் 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார். ஜேசன் ஹோல்டர் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி தரப்பில் அட்கின்சன் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்து 94 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 95 ரன்களும், ஜோ ரூட் 87 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 62 ரன்களும் எடுத்தனர்.

அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் அணி 175 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்க் வுட் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

82 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் ஸ்டோக்ஸ் தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம் அடித்தார். ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார். டக்கெட் ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் இந்த ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. மார்க் வுட் ஆட்டநாயகனாகவும், இத்தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய அட்கின்சன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in