ரியல் மேட்ரிட் கால்பந்து அணியைச் சேர்ந்த 18 வயதான எண்ட்ரிக், தனது 23 வயது காதலி மிராண்டாவைத் திருமணம் செய்துள்ளார்.
பிரேஸில் நாட்டைச் சேர்ந்த எண்ட்ரிக் கடந்த ஜூலை மாதத்தில் ரியல் மேட்ரிட் அணியில் இணைந்தார். இதுவரை அந்த அணிக்காக 5 ஆட்டங்களில் விளையாடி 2 கோல்களை அடித்துள்ளார். இந்நிலையில் எண்ட்ரிக், தனது 23 வயது காதலி மிராண்டாவைத் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கியபோது ஒரு தனிப்பட்ட காதல் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் எந்தவொரு சூழலிலும் அடிக்கடி ‘ஐ லவ் யூ’ என்று இருவரும் சொல்லிக்கொள்ள வேண்டும், மற்ற பெண்களின் இன்ஸ்டாகிராம் போஸ்டில் எண்ட்ரிக் கமெண்ட் செய்யக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், எண்ட்ரிக் மிகவும் விரும்பி விளையாடும் ஜிடிஏ என்கிற கேமில் விர்ச்சுவல் கேர்ள்ஃபிரண்ட் வைத்திருக்கக் கூடாது போன்ற பல நிபந்தனைகளுடன் இவர்கள் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கின்றனர்.