கேகேஆர் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
40 வயதான பிராவோ 2021-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 2022-ல் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆனார். மேலும், 2024 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகவும் செயல்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.
முன்னதாக, சிபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டுடன் சிபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்தார். ஆனால் அவரது பயணம் எதிர்பாராத விதமாகக் காயம் காரணமாக முன்கூட்டியே முடிவடைந்தது.
இந்நிலையில் கேகேஆர் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அணியின் வீரராகவும் பயிற்சியாளராகவும் மொத்தமாக 4 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார் பிராவோ.
இதைத் தொடர்ந்து தற்போது கேகேஆர் அணியில் இணைந்துள்ளார். மேலும், சிபிஎல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20, அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் ஆகிய போட்டிகளிலும் நைட் ரைடர்ஸ் அணியுடன் இணைந்து செயல்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கேகேஆர் அணியின் ஆலோசகராக கம்பீர் செயல்பட்டார்.