துலீப் கோப்பைப் போட்டி இன்று தொடங்கியது. இதில் இரு ஆட்டங்களில் மொத்தம் 4 தமிழக வீரர்கள் விளையாடுகின்றனர்.
இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியான துலீப் கோப்பை இன்று தொடங்கி செப். 22 வரை நடைபெறுகிறது.
கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ஜெயிஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர், கெயிக்வாட், துபே போன்ற பிரபல வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
இன்று இந்தியா ஏ - இந்தியா பி இடையிலான ஒரு ஆட்டமும், இந்தியா சி - இந்தியா சி இடையிலான ஒரு ஆட்டமும் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் ஆகியோர் இந்திய பி அணியிலும், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித் ஆகியோர் இந்திய சி அணியில் விளையாடுகின்றனர்.
இது தவிர இந்திய பி அணியில் இடம்பெற்றுள்ள ஜெகதீசனுக்கும், இந்திய சி அணியில் இடம்பெற்றுள்ள சந்தீப் வாரியருக்கும் விளையாடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.