ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்

2008 முதல் 17 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடி, 22 அரை சதங்கள் உட்பட 4842 ரன்களை குவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்@ipl

ராஜஸ்தான் அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்.

2008 முதல் 17 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்களில் 38 வயதான தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். இதுவரை 257 ஆட்டங்களில் விளையாடி 22 அரை சதங்கள் உட்பட 4842 ரன்கள் குவித்துள்ளார். 161 சிக்ஸர்களை விளாசிய இவர், விக்கெட் கீப்பிங்கில் 37 முறை ஸ்டம்பிங்கும், ஒட்டுமொத்தமாக 145 கேட்சுகளையும் பிடித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் தில்லி, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்காக தினேஷ் கார்த்திக் விளையாடி உள்ளார்.

தோனிக்கு பிறகு ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் சிறந்தவர் தினேஷ் கார்த்திக். 2013-ல் ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். கேகேஆர் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்றைய ஆட்டத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். எதிரணி வீரர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கட்டியணைத்து அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in