சென்னையில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் பார்த்த தோனி!

சிஎஸ்கே அணி தனது அடுத்த ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மார்ச் 26 அன்று விளையாடுகிறது.
‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் பார்த்த தோனி!
‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் பார்த்த தோனி!
1 min read

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் தோனியும், தீபக் சஹாரும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தை பார்த்து ரசித்தனர்.

ஐபிஎல் போட்டி மார்ச் 22 அன்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணி தனது அடுத்த ஆட்டத்தில் குஜராத் அணியுடன் மார்ச் 26 அன்று விளையாடுகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், நட்சத்திர வீரரான தீபக் சஹாரும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தை பார்த்து ரசித்தனர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

பிப். 22 அன்று மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படம் தமிழகத்தில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், சமீபத்தில் உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து, அதிக வசூல் செய்த மலையாளப் படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in