தந்தை ஸ்தானத்தில் எம்எஸ் தோனி: மதீஷா பதிரனா

"கிரிக்கெட்டை ரசித்து விளையாடு, உடலைப் பார்த்துக் கொள் என்றுதான் அவர் எப்போதும் என்னிடம் சொல்வார்."
தந்தை ஸ்தானத்தில் எம்எஸ் தோனி: மதீஷா பதிரனா
ANI

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தனக்கு தந்தை ஸ்தானத்தில் இருப்பதாக இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரனா தெரிவித்துள்ளார்.

தோனி குறித்து பதிரனா தெரிவித்துள்ளதாவது:

"எனது தந்தைக்குப் பிறகு, கிரிக்கெட் வாழ்க்கையில் தந்தை ஸ்தானத்தை நிரப்புவது தோனிதான். காரணம், அவர் என்னை நன்கு கவனித்துக் கொள்வார், நல்ல அறிவுரையை வழங்குவார், நான் வீட்டிலிருக்கும்போது என்ன தந்தை உபதேசம் வழங்குவதைப்போலவே இவரும் அறிவுரை கூறுவார்.

கிரிக்கெட்டை ரசித்து விளையாடு, உடலைப் பார்த்துக் கொள் என்றுதான் அவர் எப்போதும் என்னிடம் சொல்வார். நான் இங்கு (சிஎஸ்கே) இருக்கும்பட்சத்தில் இன்னும் ஓர் ஐபிஎல் பருவத்தில் விளையாட முடிந்தால், எங்களுடன் இணைந்து விளையாடுங்கள்" என்றார் பதிரனா.

ஐபிஎல் 2023-ல் சிஎஸ்கேவுக்காக 12 ஆட்டங்களில் விளையாடிய பதிரனா 14.63 சராசரியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிஎஸ்கே 5-வது முறையாகக் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். நடப்பு ஐபிஎல் பருவத்தில் காயம் காரணமாக 6 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். 13 சராசரியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நடப்பு பருவத்தில் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சிஎஸ்கே 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in