ஐபிஎல் 2025-ல் அன்கேப்டு வீரராக தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2025-2027 பருவத்துக்கான புதிய விதிமுறைகளை பிசிசிஐ நேற்று (செப். 29) வெளியிட்டது. இதில், சர்வதேச ஆட்டங்களுக்கு 5 வருடங்கள் தேர்வாகாத இந்திய வீரர், அன்கேப்டு வீரராகக் குறிப்பிடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025-ல் அன்கேப்டு வீரராக தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி கடைசியாக இந்திய அணிக்காக 2019 ஜூலையில் விளையாடினார். அதன் பிறகு தனது ஓய்வை அறிவித்த அவர், ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி விளையாடி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனது. மேலும், அவர் பிசிசிஐ ஒப்பந்தத்திலும் இல்லை. எனவே, வரவிருக்கும் ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணி தோனியை அன்கேப்டு வீரராக தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஹைதராபதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனி, “ஐபிஎல் தொடங்க இன்னும் நிறைய நேரம் உள்ளது. வீரர்களைத் தக்கவைப்பதில் ஐபிஎல் நிர்வாகம் எடுக்கும் முடிவைப் பார்க்க வேண்டும். விதிமுறைகள் முறையாக வகுக்கப்பட்ட பிறகு, அணியின் நலன் கருதி முடிவெடுப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.