என்கிடி விலகல்: புதிய வீரரைத் தேர்வு செய்த தில்லி கேபிடல்ஸ்

ஆஸி. பேட்டரான ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், அவருடைய அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார்.
என்கிடி விலகல்: புதிய வீரரைத் தேர்வு செய்த தில்லி கேபிடல்ஸ்
ANI

ஐபிஎல் 2024 போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியைச் சேர்ந்த லுங்கி என்கிடி காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து ஆஸி. பேட்டர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எஸ்ஏடி20 போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து இன்னமும் குணமாகாததால் ஐபிஎல் 2024 போட்டியிலிருந்து என்கிடி விலகியுள்ளார். இதுவரை விளையாடிய 14 ஐபிஎல் ஆட்டங்களில் 25 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார்.

ஆஸி. பேட்டரான ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், அவருடைய அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார். ஐஎல்டி20 போட்டியில் மெக்கர்க், 3 இன்னிங்ஸில் 213.72 ஸ்டிரைக் ரேட்டுடன் 109 ரன்கள் எடுத்திருந்தார். கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரு ஒருநாள் ஆட்டங்களில் 21 வயது மெக்கர்க் விளையாடினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in