தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் நீக்கம்

2021-க்கு பிறகு தில்லி அணியால் குவாலிஃபையர் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை.
தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் பாண்டிங் நீக்கம்
1 min read

தில்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், இதற்கு முன்னதாக தலைமைப் பயிற்சியாளரை மாற்ற தில்லி கேபிடல்ஸ் முடிவு செய்துள்ளது.

தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் கடந்த 2018-ல் நியமிக்கப்பட்டார். அப்போது அணியின் பெயர் தில்லி டேர்டெவில்ஸ் என்று இருந்தது. 2019, 2020 மற்றும் 2021 ஆகிய பருவங்களில் தில்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. 2020-ல் முதல்முறையாக தில்லி அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

2021-க்கு பிறகு தில்லி அணியால் குவாலிஃபையர் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை. கடந்த ஐபிஎல் பருவத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி 6-வது இடத்தைப் பிடித்தது.

அடுத்த ஐபிஎல் பருவத்துக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது. புதிய அணியை உருவாக்கத் தயாராகி வரும் நேரத்தில் தலைமைப் பயிற்சியாளரையும் மாற்ற தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தில்லி அணியின் மீதமுள்ள பயிற்சியாளர் குழுவில் அணியின் கிரிக்கெட் இயக்குநராக சௌரவ் கங்குலி, துணைப் பயிற்சியாளராக பிரவீன் ஆம்ரே, பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ், ஃபீல்டிங் பயிற்சியாளராக பிஜு ஜார்ஜ் ஆகியோர் உள்ளார்கள்.

பாண்டிங் தலைமையின் கீழ் இயங்கிய தில்லி அணி:

  1. 2018 - 8-வது இடம்

  2. 2019 - குவாலிஃபையர் 2 (லீக் சுற்றின் முடிவில் 3-வது இடம்)

  3. 2020 - இறுதிச் சுற்று (லீக் சுற்றின் முடிவில் 2-வது இடம்)

  4. 2021 - குவாலிஃபையர் 2 (லீக் சுற்றின் முடிவில் முதலிடம்)

  5. 2022 - 5-வது இடம்

  6. 2023 - 9-வது இடம்

  7. 2024 - 6-வது இடம்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in