குல்தீப் அபார பந்துவீச்சு: தில்லி அணிக்கு 2-வது வெற்றி!

அறிமுக ஆட்டத்தில் விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.
தில்லி அணிக்கு 2-வது வெற்றி!
தில்லி அணிக்கு 2-வது வெற்றி!ANI

லக்னௌ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் தில்லி, லக்னௌ அணிகள் லக்னௌவில் விளையாடின. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் ராகுல் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

4 பவுண்டரிகள் அடித்து அதிரடியாக விளையாடிய டி காக்கின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வந்தது. 19 ரன்களில் டி காக் வெளியேற அடுத்து வந்த படிக்கல் 3 ரன்களிலும், ஸ்டாய்னிஸ் 8 ரன்களிலும், பூரன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் லக்னௌ அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. குல்தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஒருபக்கம் நிலைத்து விளையாடிய ராகுல் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு தீபக் ஹூடா 10 ரன்களிலும், கிருனாள் பாண்டியா 3 ரன்களிலும் வெளியேறினர்.

இதனால் லக்னௌ அணி 13 ஓவர்கள் முடிவில் 94 ரன்கள் மட்டுமே எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதைத் தொடர்ந்து கடைசியில் பதோனி மற்றும் அர்ஷத் கான் அருமையான கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் லக்னௌ அனி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. தில்லி அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய தில்லி அணியில் வார்னர் 8 ரன்களில் வெளியேற ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் கூட்டணி அமைத்தனர். இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாட, இந்த ஜோடியை ரவி பிஷ்னாய் பிரித்தார். பிரித்வி ஷா 6 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் மற்றும் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து 77 ரன்கள் சேர்த்தனர். இதன் பிறகு ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்ததாக ரிஷப் பந்த் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு ஸ்டப்ஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் இணைந்து 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆட்டத்தை முடித்தனர். ஸ்டப்ஸ் 15 ரன்களும், ஷாய் ஹோப் 11 ரன்களும் எடுத்தனர். இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தில்லி அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in