ஐபிஎல்: குஜராத்தை நொறுக்கியது தில்லி!

தில்லி அணி 3 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியது.
குஜராத்தை நொறுக்கியது தில்லி!
குஜராத்தை நொறுக்கியது தில்லி!ANI

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தில்லி அணி.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் தில்லி, குஜராத் அணிகள் அஹமதாபாதில் விளையாடின. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ஆரம்பம் முதல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத் அணி. எந்த ஜோடியும் 20 ரன்களுக்கு அதிகமாக எடுக்கவில்லை. கில் 8 ரன்கள், சாஹா 2 ரன்கள், சாய் சுதர்சன் 12 ரன்கள், மில்லர் 2 ரன்கள், அபினவ் மனோகர் 8 ரன்கள், ஷாருக் கான் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ரஷித் கான் அதிகபட்சமாக 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்டர்களும் வேகமாக வெளியேற குஜராத் அணி 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். தில்லி அணியில் அனைவரும் சிறப்பாக பந்துவீசினர்.

முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா மற்றும் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய தில்லி அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு பிரித்வி ஷா 7, போரெல் 17, ஷாய் ஹோப் 19 ரன்களிலும் ஆட்டமிழக்க ரிஷப் பந்த் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தார். தில்லி அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சந்தீப் வாரியர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தில்லி அணி 3 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in