காயத்தால் அடுத்தடுத்து விலகும் வீரர்கள்: சிஎஸ்கே பயிற்சியாளர் வருத்தம்

“தீபக் சஹாரின் காயம் கவலை அளிக்கும் நிலைமையில் உள்ளது”.
ஃபிளெமிங்
ஃபிளெமிங்

தீபக் சஹாரின் காயம் கவலை அளிக்கும் நிலைமையில் உள்ளதாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹார் 2 பந்துகள் வீசிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து அவர் பந்துவீச திரும்பவில்லை. ஏற்கெனவே காயம் காரணமாக பதிரனாவும், காய்ச்சல் காரணமாக தேஷ்பாண்டேவும் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு பேசிய ஃபிளெமிங், “தீபக் சஹாரின் காயம் கவலை அளிக்கும் நிலைமையில் உள்ளதாக” தெரிவித்துள்ளார்.

ஃபிளெமிங் பேசியதாவது:

“அணியில் நிறைய மாற்றங்களை செய்து வருகிறோம். தீபக் சஹாரின் காயம் கவலை அளிக்கும் நிலைமையில் உள்ளது. இது குறித்து மருத்துவர்களிடம் இருந்து நேர்மறையான செய்தியை எதிர்பார்க்கிறேன். இலங்கை வீரர்கள் உலகக் கோப்பைக்கான விசா தொடர்புடைய வேலைக்காக சென்றுள்ளனர். ரிச்சர்ட் கிளீசன் தனது பணியை சிறப்பாக செய்தார். முஸ்தஃபிஸுர் போட்டியிலிருந்து விலகுவது வருத்தமாக உள்ளது.

காய்ச்சல் காரணமாக தேஷ்பாண்டே விலகியது எதிர்பாராத ஒன்று. அணியில் போதிய வீரர்கள் இருந்தாலும் வீரர்கள் அவர்களின் பாத்திரங்களை புரிந்துகொள்ள போதுமான ஆட்டங்கள் அமையவில்லை, இதனால் நாங்கள் சிரமப்படுகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in