ஐபிஎல்: தில்லி வீரர் மார்ஷ் விலகல்; குல்புதின் நைப் தேர்வு!

மருத்துவப் பரிசோதனைக்காக ஆஸ்திரேலியா சென்ற மார்ஷ், இந்தியாவிற்கு திரும்பமாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
குல்புதின் நைப்
குல்புதின் நைப்ANI
1 min read

காயத்தால் மிட்செல் மார்ஷ் விலகிய நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணி ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதின் நைபை தேர்வு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் 41 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தில்லி அணி 8 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தில்லி வீரர் மிட்செல் மார்ஷ் காயத்தால் விலகியுள்ளார்.

மார்ஷ் ஏப்ரல் 12 அன்று மருத்துவப் பரிசோதனைக்காக ஆஸ்திரேலியா சென்றார். இதைத் தொடர்ந்து அவர் இந்தியாவிற்கு திரும்பமாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

மேலும், மார்ஷ் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் மார்ஷ் 4 ஆட்டங்களில் விளையாடி 61 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் அவருக்குப் பதிலாக தில்லி அணி ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதின் நைபை ரூ. 50 லட்சத்துக்கு தேர்வு செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in