முதல் டெஸ்ட்: மழையால் கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!

2-வது நாள் ஆட்டம் 15 நிமிடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட்: மழையால் கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
@bcci
1 min read

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெறவிருந்த முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கும் பெங்களூருவில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆட்டம் முழுமையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

2-வது நாள் ஆட்டம் 15 நிமிடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்படும் என்றும், மொத்தமாக 98 ஓவர்கள் வீசப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in