முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டேவிட் ஜான்சன் இன்று காலமானார். அவருக்கு வயது 52.
இந்திய அணிக்காக 1996-ல் அறிமுகமானவர் டேவிட் ஜான்சன். தனது வேகமான பந்துவீச்சால் பிரபலமான இவர் இந்திய அணிக்காக தில்லியில் ஒரு டெஸ்ட், தென்னாப்பிரிக்காவில் ஒரு டேஸ்ட் என 2 டெஸ்டில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முதல்தர கிரிக்கெட்டில் 39 ஆட்டங்களில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு சதமும் அடித்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 33 ஆட்டங்களில் பங்கேற்று 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று டேவிட் ஜான்சன் காலமானார். இவரின் மறைவுக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.