மே.இ. தீவுகள் டெஸ்ட் பயிற்சியாளராகவும் சமி நியமனம்

ஏப்ரல் 2025-ல் டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார் டேரன் சமி.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள டேரன் சமி, ஆண்ட்ரே கோலேவுக்குப் பதில் டெஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேரன் சமி கடந்தாண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். இவருடைய வழிகாட்டுதலில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 28 ஒருநாள் ஆட்டங்களில் 15 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 7-ல் 4 ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது.

டி20 பொறுத்தவரை சமி பொறுப்பேற்ற பிறகு 35 ஆட்டங்களில் 20 வெற்றிகளை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுள்ளது.

ஆண்ட்ரே கோலே கடந்த மே 2023-ல் மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவருடையத் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் 7 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இரு வெற்றிகள் மற்றும் இரு டிரா செய்துள்ளது. கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் பெற்ற வெற்றி மேற்கிந்தியத் தீவுகள் வரலாற்றில் மிக முக்கியமானது.

வெற்றிகள் பெரிதும் இல்லாததால், மேற்கிந்தியத் தீவுகள் எந்தவொரு டெஸ்ட் தொடரையும் வெல்லவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 2025-ல் டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார் சமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in