41 பந்துகளில் சதமடித்த பிரேவிஸ்: ஐபிஎல் அணிகளை விமர்சித்த டி வில்லியர்ஸ்! | Dewald Brevis

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரேவிஸ் 56 பந்துகளில் 12 ஃபோர்கள், 8 சிக்ஸர்கள் உள்பட...
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

தென்னாப்பிரிக்க இளம் வீரர் டியவால்ட் பிரேவிஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20யில் 41 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20யில் ஆஸ்திரேலியா 17 ரன்களில் வென்றது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்க அணியில் 4-வது பேட்டராக களமிறங்கினார் டியவால்ட் பிரேவிஸ். அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய பிரேவிஸ் 25 பந்துகளில் அரை சதம் அடித்தார். சிக்ஸர்களாக நொறுக்கித் தள்ளிய அவர் 41 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். சர்வதேச டி20யில் பிரேவிஸுக்கு இது முதல் சதம்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரேவிஸ் 56 பந்துகளில் 12 ஃபோர்கள், 8 சிக்ஸர்கள் உள்பட 125 ரன்களை விளாசினார். இவருடைய அதிரடியால் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  • 22 வயதில் சதமடித்ததன் மூலம், தென்னாப்பிரிக்காவுக்காக டி20யில் சதமடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு ரிச்சர்ட் லெவி 24 வயதில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.

  • 125 ரன்கள் விளாசியதன் மூலம், சர்வதேச டி20யில் தென்னாப்பிரிக்காவுக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் பிரேவிஸ் படைத்துள்ளார். இதற்கு முன்பு ஜோகனஸ்பர்கில் பாப் டு பிளெஸ்ஸி 119 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

  • ஆடவர் டி20யில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது. இதற்கு முன்பு ஜோகனஸ்பர்கில் 204 ரன்கள் குவித்ததே தென்னாப்பிரிக்காவின் சாதனையாக இருந்தது.

டியவால்ட் பிரேவிஸின் ஆதர்சமான ஏபி டி வில்லியர்ஸ் இதை எக்ஸ் தளப் பக்கத்தில் பாராட்டியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸையும் அதில் பாராட்டியுள்ளார்.

"டியவால்ட் பிரேவிஸை ஏலத்தில் எடுப்பதற்கானப் பொன்னான வாய்ப்பு ஐபிஎல் அணிகளுக்கு இருந்தது. ஆனால், தவறவிட்டன. சிஎஸ்கே மிகவும் அதிர்ஷ்டசாலி அல்லது இதுவரையிலான மிகப் பெரிய முடிவு இதுவே. இவரால் விளையாட முடியும்" என்று டி வில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் காயமடைந்த குர்ஜப்னீத் சிங் பதிலாக மாற்று வீரராக டியவால்ட் பிரேவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Dewald Brevis | South Africa | Australia | South Africa tour of Australia | AB De Villiers | ABD | Baby AB | Baby DB | Tim David | CSK | Chennai Super Kings | IPL |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in