டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச்சு தேர்வு: சிஎஸ்கேவில் 3 மாற்றங்கள்!

லேசான காயம் காரணமாக தீபக் சஹார் விளையாடவில்லை.
டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச்சு தேர்வு: சிஎஸ்கேவில் 3 மாற்றங்கள்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். லேசான காயம் காரணமாக தீபக் சஹார் விளையாடவில்லை. இவருக்குப் பதில் ஷார்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

முஸ்தபிஸூர் ரஹ்மான் மீண்டும் அணிக்குத் திரும்பியதால், மொயீன் அலி வெளியேறியுள்ளார். கூடுதல் பேட்டராக சமீர் ரிஸ்வி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். சிஎஸ்கேவில் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், மஹீஷ் தீக்‌ஷனா, முஸ்தபிஸூர் ரஹ்மான் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக உள்ளார்கள். பதிரனா இந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை.

டாஸ் வென்றிருந்தால், தாங்களும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம் என்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ், அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றார்.

கொல்கத்தா இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களில் 3 வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே 4 ஆட்டங்களில் விளையாடி இரு ஆட்டங்களில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in