தேவையான ரன்ரேட்டை அடைய முடியாமல் தடுமாறும் சிஎஸ்கே!

பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே சிஎஸ்கே பவர்பிளேயில் விக்கெட்டை இழக்காமல் விளையாடியது.
தேவையான ரன்ரேட்டை அடைய முடியாமல் தடுமாறும் சிஎஸ்கே!
ANI
1 min read

ஐபிஎல் 2025-ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்து 4 ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. நடப்பு ஐபிஎல் போட்டியில் இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் சிஎஸ்கே இரண்டாவது பேட்டிங்கையே செய்துள்ளது. மும்பைக்கு எதிராக மட்டும் 156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை சிஎஸ்கே வெற்றிகரமாக அடைந்தது.

அடுத்தடுத்த ஆட்டங்களில் சிஎஸ்கேவுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் 197, 183, 184, 220.

2019-க்கு பிறகு 180-க்கு மேல் வெற்றி இலக்கை சிஎஸ்கே அடைந்ததே இல்லை என்கிறது ஒரு தரவு. இந்த சோகம் நடப்பு ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதில் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே சிஎஸ்கே பவர்பிளேயில் விக்கெட்டை இழக்காமல் விளையாடியது. சிஎஸ்கே பேட்டிங் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் வந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு சற்று போராடியது சிஎஸ்கே. எனினும் இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்தது.

இலக்கை விரட்டி களமிறங்கியபோது, வெற்றிக்குத் தேவையான ரன்ரேட்டை அடைவதில் சிஎஸ்கே தொடர்ந்து தடுமாறி வருகிறது.

ஆர்சிபி-க்கு எதிராக

  • வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 9.85

  • 10 ஓவர்கள் முடிவில் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 13.2

  • 15 ஓவர்கள் முடிவில் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 19.8

  • தோல்வி வித்தியாசம் - 50 ரன்கள்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக

  • வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 9.15

  • 10 ஓவர்கள் முடிவில் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 10.9

  • 15 ஓவர்கள் முடிவில் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 12.2

  • தோல்வி வித்தியாசம் - 6 ரன்கள்

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக

  • வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 9.2

  • 10 ஓவர்கள் முடிவில் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 11.5

  • 15 ஓவர்கள் முடிவில் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 15.6

  • தோல்வி வித்தியாசம் - 25 ரன்கள்

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக

  • வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 11

  • 10 ஓவர்கள் முடிவில் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 12.9

  • 15 ஓவர்கள் முடிவில் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் - 15

  • தோல்வி வித்தியாசம் - 18 ரன்கள்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in